ஐஸ் போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

Read Time:0 Second

கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் மட்டக்களப்பிற்கு ஐஸ் போதைப் பொருள் கடத்திவந்த ஒருவரை இன்று (21) அதிகாலை மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 488 மில்லிக் கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பஸ் தரப்பு நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த குறித்த பஸ்வண்டியை நிறுத்தி குறித்த நபரை விசேட அதிரடிப்படையின் சோதனை மேற்கொண்டபோது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் 3 ம் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close