தலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை

Read Time:0 Second

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மஞ்சேஸ் வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்.

இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 44). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். கடந்த 16 ஆம் திகதி பள்ளி முடிந்ததும் ரூபஸ்ரீ, தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கு நடந்த தனது உறவினர் இல்ல திருமணத்திலும் பங்கேற்றார்.

அதன்பிறகு ஆசிரியை ரூபஸ்ரீ வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரை கணவரும், உறவினர்களும் தேடிப்பார்த்தனர். ஆனால் ரூபஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று மஞ்சேஸ்வரம் கடற்கரையில் ரூபஸ்ரீ பிணமாக கிடந்தார். அவரது தலை முடி அறுக்கப்பட்டு இருந்தது. உடலிலும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது. ரூபஸ்ரீயை யாராவது கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

அந்த வழியாகச் சென்ற மீனவர்கள் ரூபஸ்ரீ பிணமாக கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூபஸ்ரீயை கடத்தியவர்கள் அவரை கற்பழித்துக் கொலை செய்தார்களா? எதற்காக தலைமுடியை அறுத்துக் கொலை செய்தனர்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close